search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தில்ருவான் பெரேரா"

    பல்லேகெலேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று பல்லேகெலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ரோரி பேர்ன்ஸ் (43), ஜோஸ் பட்லர், சாம் குர்ரான் (64) ஆகியோரின் ஆட்டத்தால் 75.4 ஓவரில் 290 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 19 ரன்னுடனும், புஷ்பகுமாரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம்  தொடங்கியது. புஷ்பகுமாரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருணாரத்னே உடன் தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. கருணாரத்னே 63 ரன்னிலும், டி சில்வா 59 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் மெண்டிஸ் 1 ரன்னிலும், மேத்யூஸ் 20 ரன்னிலும் வெளியேறினார்கள். 7-வது வீரராக களம் இறங்கிய ரோஷென் சில்வா 85 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 103 ஓவரில் 336 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. லீச் மற்றும் ரஷித் தலா மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.

    46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்று ஒரேயொரு ஓவர் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து ரன் கணக்கையும் துவக்கவில்லை. விக்கெட்டும் இழக்கவில்லை.
    காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. #SLvSA #Perera
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்றுமுன்தினம் (12-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். இவரது அரைசதத்தால் இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 351 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் 352 ரன்கள் வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்தது இலங்கை.



    காலே மைதானத்தில் 352 ரன்கள் என்பது இமாலய இலக்காகும். இந்த இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ஆனால் தில்ருவான், ஹெராத் சுழற்பந்து வீச்சில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 73 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்ருவான் 6 விக்கெட்டும், ஹெராத் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் 20-ந்தேதி தொடங்குகிறது.
    ×